Advertisement

Responsive Advertisement

இரு வேறு உலகம்- விக்கிரமாதித்தியன்



 கலை இலக்கியத்துறையில் சாதனைப்படைத்த பல நட்சத்திரங்களின் கலைப்பயண வாழ்க்கை அனுபவங்களை பகிரும் சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு நூலாக அமைகிறது " இரு வேறு உலகம்".

.

பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த காலங்களில்(80 -90 களில்)தம் வேலை நிமித்தம் சந்தித்த கலை நட்சத்திரங்களுடனான நேர்க்காணல்கள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலை வழங்கியிருக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன்( பத்திரிகையாளனாக).

.

இசைஞானி இளையராஜா,வைரமுத்து,எழுத்தாளர் பாலகுமாரன்,எழுத்தாளர் அகிலன்,

எழுத்தாளர் வண்ணநிலவன்,நடிகர் வி.கே.ராமசாமி இயக்குனர் மகேந்திரன்,பாடகர் கே.ஜெ.ஜேசுதாஸ்,புலவர் புலமைப்பித்தன்,ஓவியர் கோபுலு,

கவிஞர் கண்ணதாசன்,நடிகை மனோரமா என 65 க்கும் மேற்பட்ட கலை இலக்கியத்துறை ஜாம்பவான்களுடனான பிரத்யேக நேர்காணல்கள் ஒவ்வொன்றும் தரமானதாகவும்,தனித்தன்மை வாய்ந்ததாகவும் அமைவது சிறப்பு.

.

பரப்பான கேள்விகள்,காரசாரமான விவாதங்கள்,விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கணைகள் என ஒரு பத்திரிகையாளராக விக்ரமாதித்தன் அவர்கள் கைத்தட்டல்களைப்

பெறுகின்றார்.கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சூப்பர்!!!!

.

நாம் வியந்துப் பார்க்கும் நட்சத்திரங்கள் ஒரே நாளில் வெற்றிப் பெறவில்லை.கரடுமுரடான பாதையில் பயணித்து,விடாமுயற்சியால் வென்றுக் காட்டியவர்கள்,கலை மீது அளவிலா காதல் கொண்டவர்கள் என்பதாலேயே சாதனையாளர்களாக பரிணமித்ததார்கள் என்பதை இந்நூலைப் படித்து முடிக்கும் போது நீங்களும் உணரலாம்.

.

கலை இலக்கியத்துறையானது ஒன்று பிரபல்யமானதாக இருக்கும்.இல்லை அறியப்படாததாக இருக்கும்.அதனால் தான் இருவேறு உலகம் எனப் பெயரிட்டப்பட்டது என 

இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதை போன்று,கலைஞர்கள் சிலர் மிக பிரபல்யமானவர்களாக இருந்தாலும், சிலர் அறியப்படாதவர்களாக இருந்தாலும் அவர்களின் கலைப் பயணம் என்பது ஒரே உலகத்தில் தான்.அது கலைக்கான தொடர் பயணம்!!! 

.











கலை இலக்கியத் துறை சார்ந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் இந்நூலைப் பரிந்துரைக்கிறேன்.

பத்திரிகைத்துறையில் இருப்பவர்கள் நேர்காணல்களின் போது எப்படி கேள்விகளைத் தொடுப்பது என அறிந்துக்கொள்ள இந்நூலைப் படிக்கலாம்.

.

"என்னுடைய இந்த பத்திரிகை எழுத்துகள் தமிழ்ச்சமூகத்தின், கலாசாரத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை காண்பிக்கக்கூடியவை என்றே நம்புகிறேன். முக்கியமாக, மைய நீரோட்டத்தின் போக்கை எடுத்துப் பேசுபவை. இந்தவகையில் இவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நானே பிரதான நீரோட்டத்தைச் சார்ந்தவன்தான். அதில் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவன்தான்"- கவிஞர் விக்ரமாதித்யன்.

.

#tamilbookreaders #tamilbook #tamilbooks #tamilbooksreview

Post a Comment

0 Comments